நினைவேந்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

-சுமன்-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் இன்று திங்கட்கிழமை கடந்த மாவீரர் தின நிகழ்வு தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை சந்திக்கும் முகமாக மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் உள்ளிட்டவர்களைச் சந்தித்து கலந்துரையாடியதுடன், கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை தொடர்பில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், எதிர்வரும் 21ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது இந்த விடயங்களையும் முன்னிலைப்படுத்தி கலந்துரையாடுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதன்போது தமிழீழ விடுதலை இயக்கத்தின் உபதலைவரும், முன்னாள் கிழக்கு மாகணசபை தவிசாளருமான இந்திரகுமார் பிரசன்னா கலந்துகொண்டிருந்தார்.