நாளை பாடசாலைகள் ஆரம்பம் : முதலாம் தவணை நீடிப்பு

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் செயற்பாடுகள் நாளை திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் 2022ஆம் ஆண்டுக்கான முதலாம் தவனை கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் மற்றும் மூன்றாம் தவனை கற்றல் செயற்பாடுகள் இடம்பெறும் காலப்பகுதி தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், முதலாம் தவனை பரீட்சை இடம்பெற மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழைமைகளில் மாத்திரம் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் வீட்டிலிருந்து கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் எனவும், கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை விடுத்து அறிவித்துள்ளது.

 

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24