“நாம் 200” தேசிய நிகழ்வு

மலையக தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாவதை சிறப்பிக்கும் வகையில் “நாம் 200” என்ற தேசிய நிகழ்வு கொழும்பு சுகதாச உள்ளக அரங்கில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் நான்கு மணிக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், கௌரவ அதிதியாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்வதுடன் சிறப்பு உரையொன்றையும் ஆற்றவுள்ளார்.