நாமல் ராஜபக்ஸ இராஜினாமா?

முன்மாதிரியாகத் தேவையென்றால் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவும் தயார் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே விளையாட்டுத்துறை அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 “முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தின் அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைக்க முன்வந்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடைத்துள்ள அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்வதன் மூலம் முன்னுதாரணமாக இருக்க முடியும்” என்றும் அவர் கூறினார்.

“ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து அவர்களால் முன்மாதிரியாக இருக்க முடிந்தால், நான் அவர்களுடன் சேர்ந்து எனது பதவியை இராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறேன். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.