
நாமலின் கிரிஷ் கட்டட வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு
கிரிஷ் கட்டட விசாரணைகள் நிறைவுற்றதா என்பது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இன்று புதன்கிழமை நிதி குற்றவியல் விசாரணை பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை கிரிஷ் ட்ரான்வர்ட் சதுக்கத்தில் 4.3 ஏக்கர் குத்தகைக்கு வழங்கிய போது 70 மில்லியன் ரூபாய் நிதி மோசடி இடம்பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிதி மோசடி தொடர்பில் முன்னாள் விளையாட்டு அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகள் தொடர்பிலேயே நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட சட்ட நடவடிக்கை தொடர்பான வழக்கு கோப்பு மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதால், விசாரிப்பதற்கு வழக்கு கோப்பு எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் 26 ஆம் திகதி அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சம்பத் மென்டிஸ் தாக்கல் செய்த மனுவைப் பரிசீலித்தபின்னர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.