அம்பாறை மாவட்டம் கல்முனை, சாய்ந்தமருது மற்றும் மருதமுனை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு முதல் மக்கள் எரிபொருளை பெறுவதற்கு எரிபொருள் நிலையங்களில் வரிசையில் காத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் கியூ.ஆர் முறைமையினால் சீராக மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விநியோகம் திடிரென இவ்வாறு நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.