நாட்டில் சீரான வானிலை நிலவும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக வடஅகலாங்கு11.9N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 84.2E இற்கும் இடையில் யாழ்ப்பாணத்திற்கு வடகிழக்காக 520 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ள தாழமுக்கமானது படிப்படியாக வலுவிழந்து வடமேற்கு திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அடுத்த 24 மணித்தியாலங்களில் அது பெரும்பாலும் தமிழ்நாடு – பாண்டிச்சேரி கரையோரப் பிரதேசங்களை நோக்கி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.