நாட்டின் சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சிறைச்சாலைகளில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகள் திணைக்களம் 2022 ஆம் ஆண்டுடன் தொடர்புடைய சிறைக்கைதிகள் தொடர்பான புள்ளிவிபரங்களை வெளியிடும் போதே இதனை அறிவித்துள்ளது.

இதன்படி, சிறைச்சாலைத் திணைக்களத்தின் அறிக்கையின்படி, இன்று ஜீலை 21 ஆந் திகதி வரை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 20500 ஐ நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க