நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பெருந் திருவிழாவுக்கான கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு

-யாழ் நிருபர்-

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலயப் பெருந் திருவிழாவுக்கான கொடிச் சீலை எடுத்து வரும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.

ஆலய மரபின்படி நல்லூர் கிழக்கு சட்ட நாதர் ஆலயத்தை அண்மித்து அமைந்துள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட அபிஷேக ஆராதனைகளைத் தொடர்ந்து, கொடிச் சீலை தயாரிக்கும் மரபினையுடைய குடும்பத்தினர் சிறிய தேர் ஒன்றில் கொடிச் சீலையை எடுத்து வந்து நல்லூர்க் கந்தசுவாமி ஆலயப் பிரதம குருக்களிடம் கையளித்தனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந் திருவிழா நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாள்கள் இடம்பெறவுள்ளது.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172