நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் திருமஞ்சத்திருவிழா!

-யாழ் நிருபர்-

வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவின் பத்தாம் திருவிழா ஆகிய திருமஞ்சத்திருவிழா நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றது

இவ் ஆலயமஹோற்சவ கொடியேற்றம் கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்று, பதினாறு தினங்கள் இடம்பெறவுள்ள பெருவிழாவில், ஜுலை 01 ம் திகதியன்று சப்பறத் திருவிழாவும், ஜுலை 02 ம் திகதியன்று தேர்த்திருவிழாவும், ஜுலை 03 ம் திகதியன்று தீர்த்தோற்சவமும், ஜுலை 04ஆம் திகதியன்று தெப்போற்சவமும் இடம்பெறவுள்ளது.

இதில் நயினாதீவு நாகபூசணி அம்மன், விநாயகர் உள்ளிட்ட தெய்வங்கள் திருமஞ்சத்தில் வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்

இதில் பல பாகங்களில் வருகைதந்து பக்தர்களின் பக்திபூர்வமாக அருள்கடாச்சத்தினை பெற்றுச்சென்றனர்.