மூதூர் – இருதயநாதர் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனை

-மூதூர் நிருபர்-

மூதூர் – இருதயநாதர் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனை இடம்பெற்றது.

தேவாலயத்தின் அருட்தந்தை அமல்ராஜ் ஆராதனை நிகழ்வை நடாத்தியிருந்துடன் இவ் நள்ளிரவு ஆராதனையினையில் அதிகளவான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.

மேலும், கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனை நிறைவின்போது மக்கள் தங்களுக்குள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டதையும் காண முடிந்தது.

அதேவேளை தேவாலயத்தின் நுழைவாயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததோடு சோதனை நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.