நண்பர்களுடன் சேர்ந்து படிக்க சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

-பதுளை நிருபர்-

வீட்டின் மேல் மாடியில் இருந்து கீழே விழுந்து 17 வயதுடைய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மடுகஸ்தலாவ ரபர்வத்தை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் சக மாணவர்களுடன் சேர்ந்து படிப்பதற்காக மெதவெலகம பகுதியில் உள்ள தனது நண்பரின் வீட்டுக்கு சென்று அங்கு இரவு தங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை இரவு உறங்கிகொண்டிருந்த போது 10 மணியளவில் சிறுநீர் கழிப்பதற்காக எழுந்து சென்றுள்ளார்.

இதன்போது வீட்டு மேல் மாடியில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவன் பசறை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இம்முறை தரம் 11ல் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க