தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் கல்வி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி திட்டமானது நேற்று வியாழக்கிழமை திருகோணமலை தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது.

இத்தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி திட்டமானது 2023 ஆம் ஆண்டு திருகோணமலை தொழிநுட்ப கல்லூரியில் கற்கை நெறியை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்காக நடாத்தப்பட்டது.

எதிர்கால தொழில் முயற்சிகள், ஏனைய உயர்கல்வி வாய்ப்புகள், வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தொடர்பான பல விடயங்கள் இதன்போது வளவாளர்களினால் தெளிவூட்டப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட இணைப்பாளர் திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்கல்வி க.மதுரன், மாவட்ட இணைப்பாளர் மனிதவள அபிவிருத்தி திருமதி ஜெசினா பௌமி, மொறவெவ பிரதேச செயலக திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.முகுந்தன் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.