தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மஹோற்சவம்

-யாழ் நிருபர்-

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

வரலாற்று சிறப்பு மிக்க யாழ். வடமராட்சி – தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

செப்டெம்பர் 8 ஆம் திகதி சப்பரத் திருவிழாவும், மறுநாள் 9 ஆம் காலை 9 மணிக்குத் தேர் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

செப்டெம்பர் 10 ஆம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும், அன்று மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும், மறுநாள் 11 ஆம் திகதி பூக்காரர் பூஜையும் நடைபெறவுள்ளது.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172