தேர்ந்தெடுக்கப்பட்ட 305 வகையான பொருட்களுக்கு இறக்குமதி தடை

தேர்ந்தெடுக்கப்பட்ட 305 வகைகளை சேர்ந்த பொருட்களை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக தடை செய்ய நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த தடை நேற்று செவ்வாய்க்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும், என இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், நேற்று முன் திங்கட்கிழமை அனுப்பப்பட்ட மற்றும் செப்டம்பர் 14 இற்கு முன் டெலிவரி செய்யப்பட்ட பொருட்களுக்கு இது பொருந்தாது.

பால், கிரீம்கள், வெண்ணெய், வெட்டப்பட்ட பூக்கள், ஓட்ஸ், சாக்லேட், பழங்கள், பீர், தேங்காய் மதுபானம், வாசனை திரவியங்கள், அழகுசாதனப் பொருட்கள், ஷாம்புகள், கைப்பைகள், பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தைத்த ஆடைகள், கத்திகள், கத்தரிக்கோல், குளிரூட்டிகள், குளிர்சாதன பெட்டிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், தொலைபேசிகள் மற்றும் தொலைபேசி பாகங்கள் ஆகியவை அடங்கும்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க