தேர்தலுக்காக புதிய அவதாரம் எடுத்த டிரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள உணவகமொன்றில் பிரென்ச் பிரைஸ் தாயரித்துக் கொடுத்து பிரசாரத்தில் ஈடுபட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 5ஆம் திகதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகின்றனர். இருவரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறனர்.
இந்நிலையில், பென்சில்வேனியாவில் உள்ள உணவகமொன்றில் அவர் செஃப் உடை அணிந்து பிரென்ச் பிரைஸ் தயாரிப்பில் ஈடுபட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.