தேயிலையின் சராசரி விலை அதிகரிப்பு
கொழும்பு ஏலத்தில் தேயிலையின் சராசரி விலை, கடந்த ஓகஸ்ட் மாதத்தில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் தேயிலை கிலோ ஒன்றுக்கான சராசரி விலை 3.49 அமெரிக்க டொலர்களாக இருந்தது.
இந்தநிலையில், கடந்த ஓகஸ்ட் மாதத்தில் தேயிலை கிலோவொன்றுக்கான சராசரி விலை 4.02 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.