தென்கிழக்கு பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்கு நுழைவுச்சீட்டு அறிமுக நிகழ்வு

-அம்பாறை நிருபர்-

எதிர்வரும் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ள 12 ஆவது சர்வதேச ஆய்வரங்கு மாநாட்டுக்கான நுழைவுச்சீட்டுக்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வும் தனியார் துறை நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழங்கிவைக்கும் நிகழ்வும் பல்கலைக்கழக நினைவுச் சின்னத்திற்கு முன்பாகவுள்ள திறந்த வெளியில் மாநாட்டின் இணைப்பாளர் பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா தலைமையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

உள்ளூர் தனியார்துறை நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பல்கலைக்கழக பீடாதிபதிகள், நூலகர், பேராசிரியர்கள் திணைக்களங்களின் தலைவர்கள் விரிவுரையாளர்கள் பிரதி நிதியாளர் என பலரும் கலந்து கொண்டிருந்த நிகழ்வுக்கு உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

எதிர்வரும் 29 ஆம் திகதி நிலையான எதிர்காலத்திற்கான டிஜிட்டல் மாற்றம் டிஜிட்டல் ட்ரான்போமேஸன் போர் எ சிஸ்டய்னபில் ஃபியுசர் (Digital Transformation for a Sustainable Future) எனும் தொனிப்பொருளிலான குறித்த 12 ஆவது சர்வதேச ஆய்வரங்குக்கு பிரித்தானியாவின் குளோசெஸ்டர்ஷைர் (Gloucestershire ) பல்கலைக்கழகத்தின் ஹேட் ஒஃப் ஸ்கூல் ஒஃப் கம்பியூட்டிங் அன்ட் என்ஜினியரிங் (Head of School of Computing and Engineering) பேராசிரியர் கமால் விச்கோம் பிரதான பேச்சாளராக கலந்து கொள்ளவுள்ளார்.

குறித்த மாநாட்டில் 200 ஆராச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்