
தீர்க்கமான நடவடிக்கையொன்றை மேற்கொள்ளவே நாடாளுமன்றம் செல்கிறேன்
தீர்க்கமான நடவடிக்கையொன்றை மேற்கொள்வதற்காகவே நாடாளுமன்றத்திற்குச் செல்லவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பேன், என அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும்,
“நாடாளுமன்றம் ஒரு தீர்க்கமான நடவடிக்கை எடுக்கும் வரை நான் காத்திருக்கிறேன். எனது தாய்நாட்டின் தேசிய நலன்கள் மற்றும் எனது சக இலங்கையர்களின் அனைத்து உரிமைகளையும் பாதுகாக்க சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பேன் என்பதை மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.