-யாழ் நிருபர்-
யாழ் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் பராமரிப்பு குறைபாடு காணப்படுவதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
பல மில்லியன்கள் செலவில் கட்டப்பட்டுள்ள திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் மரக் கிளைகளின் சருகுகள் விழுந்து அவை துப்பரவு செய்யப்படாமல் காணப்படுகிறது.
மரக்கிளைகள் கட்டடத்தை முட்டும்படியாக இருக்கிறது. ஆகையால் அந்த கட்டடம் விரைவில் சேதமடையக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது.
நிர்வாக வினைத்திறனின்மை காரணமாகவே இவ்வாறான பிரச்சினைகள் எழுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இந்த பண்பாட்டு மையத்தை கிராமப்புற மக்களும் பயன்படுத்த விரும்புவார்கள். ஆகையால் அவர்களும் இதனை பயன்படுத்தக் கூடியவாறு கட்டணங்களை குறைத்து, அல்லது மானிய அடிப்படையில் பயன்படுத்துவதற்கு வழங்கினால் அது அந்த மக்களுக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான விடயமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
எனவே இவை குறித்து இந்திய அரசாங்கம், யாழ். இந்திய துணைத் தூதரகம் ஆகியன கரிசினை செலுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.


