
திருக்கோணேச்சரத்தை பார்வையிட்ட இந்திய தூதரக அதிகாரிகள்
-மூதூர் நிருபர்-
திருக்கோணேச்சர ஆலய எதிர்காலத் திருப்பணி தொடர்பாக ஆராய்ந்து கொள்வதற்கு இந்திய தூதரக உயர் அதிகாரிகள் நேற்று சனிக்கிழமை ஆலயத்திற்கு வருகைதந்து பல விடயங்கள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர்.
அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் ஆலய நிர்வாக சபைத் தலைவர், உறுப்பினர்கள் என பலர் இதில் கலந்து கொண்டனர்.
இந்தியப் பிரதமரிடம் , திருக்கேதீச்சர ஆலயத்தை கருங்கற்களால் அமைத்தது போன்று திருக்கோணேச்சர ஆலய திருப்பணிக்கும் உதவுமாறு கேட்கப்பட்டமை குறித்து அவர்கள் அக்கறை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.