திருகோணமலை மாவட்டத்தில் வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன

-மூதூர் நிருபர்-

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.00 மணியளவில் நிறைவடைந்துள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் மொத்த வாக்குகளில் 76.08 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

வாக்களிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

அந்த வகையில் 24 பிரதான வாக்கெண்ணும் நிலையங்களிலும் 10 அஞ்சல் வாக்கெண்ணும் நிலையங்களும் வாக்கெண்ணும் நடவடிக்கைகளுக்காக திருகோணமலை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கைகளுக்காக 318 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

நான்காயிரம் அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டனர்.அதேபோல 24 பிரதான வாக்கெண்ணும் நிலையங்களும்,10 அஞ்சல் வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் 315,925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

திருகோணமலை மாவட்டத்தில் சுமுகமான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம் பெற்று நிறைவடைந்துள்ளது.இதுவரையில் பெரிய அசம்பாவிதங்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.