திருகோணமலையில் வாகன விபத்து: ஒருவர் படுகாயம்

 

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

திருகோணமலை நிலாவெளி பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக பயணித்த முச்சக்கர வண்டியும் பட்டா வாகனமும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் நிலாவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க