திருகோணமலையில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவோம்: அப்துல்லா மகரூப்

-மூதூர் நிருபர்-

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி கட்சி திருகோணமலை மாவட்டத்திற்கான மொத்த 4 ஆசனங்களில், போனஸ் ஆசனத்துடன் இரண்டு ஆசனங்களை கைப்பற்றும் என முன்னாள் பிரதி அமைச்சரும், இக்கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான அப்துல்லா மகரூப் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை வேட்பு மனுவை தாக்கல் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்தவர்.

இம்முறை நடைபெறவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் எமது கட்சி திறமையான சிறந்த வேட்பாளர்களை களம் இறக்கியிருக்கிறது.ஆதலால் எமக்கு திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் எமக்கு ஆதரவினை தருவதற்கு தயாராக உள்ளனர்.இதனால் நாம் இம்முறை திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172