தலைவலி குணமாக பாட்டி வைத்தியம்
😔😔தலைவலி என்பது எப்பொழுது வரும் என்றே தெரியாத ஒரு விஷயமாக இருக்கும். அது வந்து விட்டால் அவ்வளவு சீக்கிரம் போய்விடவும் செய்யாது. உடம்பில் டீஹைட்ரேஷன் எனப்படும் நீர் சத்து குறைவதாலும் தலைவலி வருகிறது.
😔😔தலை வலி வர பல காரணங்கள் உள்ளன. ஜலதோஷம் காரணமாக தலை வலி ஏற்படலாம், சிலருக்கு அதிகமாக சிந்திப்பதன் மூலம் தலைவலி ஏற்படலாம், அதிக கோவம் கொண்டால் தலை வலி ஏற்படலாம், அதிக சத்தம் உள்ள இடத்தில இருந்தால் தலை வலி ஏற்படலாம். இப்படி தலைவலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அந்தவகையில் தலைவலியைக் குணமாக்குவதற்கான வழிமுறைகளைப் பார்ப்போம்.
- தலைவலி தீருவதற்கு முதலில் தண்ணீர் பருக வேண்டும். உடம்பில் நீர் சத்து குறைவதால் தலைவலி உண்டாக வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது ஆகவே அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
- சிலருக்கு உடல் உஷ்ணத்தால் கூட தலைவலி ஏற்படும். அது போன்ற சமயங்களில் சீரகம் மற்றும் கிராம்பை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அந்த நீரை பருகி வந்தால் சூட்டால் ஏற்பட்ட தலைவலி நீக்கும்.
- சூரிய உதயம் ஆகும் சமயத்தில் எருமை பாலோடு வெள்ளை எள்ளை சேர்த்து நன்கு அரைத்து அதை நெற்றியில் பற்று போட்டு சூரிய ஒளியில் காட்டினால் தலைவலி நீங்கும்.
- வில்வ இலைக்கு நீண்ட நாள் தலைவலியை குணமாக்கும் மருத்துவ குணம் உண்டு. வில்வ இலையை நன்கு அரைத்து வைத்துக்கொண்டு பதினைந்து நாட்கள் முதல் இருபது நாட்கள் வரை தொடர்ந்து ஒரு பட்டாணி அளவு சாப்பிட்டு வந்தால் நீண்ட நாட்கள் தொல்லை கொடுத்த தலைவலி நீங்கும்.
- இஞ்சியை வாயில் போட்டு மெல்ல வேண்டும். அதன் சாறு உள்ளிறங்குவதால் தீராத தலைவலி உடனே தீரும்.
- உங்கள் வீட்டில் ஆப்பிள் இருந்தால் அதை சிறிது சிறிதாக வெட்டி வையுங்கள், வெட்டிய ஆப்பிளின் மீது கொஞ்சம் உப்பை தடவ வேண்டும். பின்னர் அந்த ஆப்பிளை நன்கு மென்று கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டாலும் தலையில் இருக்கக்கூடிய பாரம் இறங்கி தலைவலியானது உடனே தீரும்.
- முள்ளங்கிச் சாறு எடுத்துப் பருகி வந்தால் தலைவலி குறையும்.
- வெற்றிலை சாறு எடுத்து அதில் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்துப் பூசவும் தலைவலி தீரும்.
- 2 மிளகை எடுத்து அதை சிறிது தேங்காய் எண்ணெயை விட்டு நன்கு அரைத்து நெற்றியில் தடவி பற்று போட்டு வந்தால் தலைவலி குறையும்.
- டீ அல்லது காப்பியில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி குறையும்.
தலைவலி குணமாக பாட்டி வைத்தியம்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்