தங்க சங்கிலியை விளுங்கிய எருமை மாடு

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் ஒருவரின் தங்க சங்கிலியினை எருமை மாடு ஒன்று விழுங்கிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

குளிப்பதற்காக தனது தங்கச்சங்கிலியினை தட்டொன்றில் வைத்து விட்டு சென்ற குறித்த பெண் மறதியினால் அதே தட்டில் எருமை மாட்டிற்கு உணவை வைத்து கொடுத்துள்ளார்.

இதன் பிறகு தனது தங்கச்சங்கிலி காணாமல் போனதனை அவதானித்த குறித்தபெண் அருகிலுள்ள மிருக வைத்தியசாலையில் சென்று நடந்தவற்றைக் கூறியுள்ளதுடன் அதன் பின்னர் மாட்டிற்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தங்கச்சங்கிலி மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது 2 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சைமேற்கொள்ளப்பட்டதுடன் எருமை மாட்டினுடைய வயிற்றில் 63 தையல்களும் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.