டிக்டொக் செயலியிலிருந்து 12.5 மில்லியன் காணொளிகள் நீக்கம்

பயன்பாட்டின் விதிமுறைகளை மீறியதற்காக பாகிஸ்தானில் சுமார் 12.5 மில்லியன் காணொளிகள் டிக்டொக் (TikTok) செயலியிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வருடம் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கிடையில் இவ்வாறான காணொளிகள் அதிக எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்டொக்கின் பாதுகாப்புக் குழு, ரஷ்ய-உக்ரைன் போர் தொடர்பான தவறான மற்றும் தீங்கு விளைவிக்கும் தகவல்களை உள்ளடக்கிய 41,191 வீடியோக்களை அகற்றியுள்ளது.

மேலும், அவற்றில் 87 சதவீதம் டிக்டொக்கின் கொள்கைகளுக்கு எதிராக தீங்கு விளைவிக்கும் தவறான தகவல்களைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க