டயானா கமகே மீதான மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிப்பு

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை நிராகரித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என அறிவிக்குமாறு கோரி குறித்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், மூவரடங்கிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய பெரும்பான்மை தீர்ப்பின் அடிப்படையில் அதனை நிராகரித்துள்ளது.

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கும் உரிமையை சவாலுக்கு உட்படுத்தி சிவில் செயற்பாட்டாளர் ஓஷல ஹேரத் மனு தாக்கல் செய்துள்ளார்.

பிரித்தானிய குடியுரிமை காரணமாக டயானா கமகே இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.