-கிண்ணியா நிருபர்-
ஜனாதிபதி செயலக நிதியத்தினால் சிறு நீரக மாற்று சத்திரசிகிச்சைக்கான உதவி தொகை தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் வைத்து இன்று புதன்கிழமை உரிய பயனாளிக்கு வழங்கி வைக்கப்பட்டது.
ஜனாதிபதி நிதியம் ஊடாக குறித்த பயனாளிக்கு ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான காசோலை பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், நிருவாக உத்தியோகத்தர் B.U.B.L.உடகெதர,கணக்காளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி நிதியம் ஊடாக மருத்துவ சேவைகளுக்கான உதவிகள் இவ்வாறு வழங்கப்படுவது பெரிதும் உதவியாக காணப்படுகிறது.