
ஜனாதிபதியை தேர்தெடுக்கும் நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஆரம்பம்
நாட்டின் இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்யும் நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஆரம்பமாகியுள்ளது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பு ஆரம்பமாகியுள்ளது.
ஜனாதிபதி பதவிக்கு 3 பேர் போட்டியிடுகின்றனர்.
அதற்காக, பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அனுரகுமார திஸாநாயக்க மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
ரகசிய வாக்கெடுப்பு மூலம் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்
இன்று புதன்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பின் பின்னர் இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதி பதவியேற்கவுள்ளார்.