ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை படுக்கை விரிப்பாக பயன்படுத்தியவர் கைது

ஜூலை 09 ஆம் திகதி ஜனாதிபதியின் இல்லத்தில் இருந்து ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை திருடிய 54 வயதான நபர் ஒருவர் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் இருந்து திருடப்பட்ட ஜனாதிபதியின் கொடியை அந்த நபர் படுக்கை விரிப்பாக பயன்படுத்திய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.

சந்தேகநபர், ஐக்கிய மக்கள் சக்தியின் துறைமுக தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவர் களுதந்திரிகே உதேனி ஜயரத்ன என்பவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரின் வாக்குமூலத்தையடுத்து அவர் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172