சொகுசு கார் விபத்து : ஒருவர் காயம்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

விபத்தில் 34 வயதுடைய காரின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி சென்ற சொகுசு கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இழுத்துச் செல்லப்பட்டு கற்பாறையில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.