
செல்ஃபி எடுக்க முயன்ற ரஷ்ய பிரஜைக்கு நேர்ந்த கதி
-பதுளை நிருபர்-
எல்ல பகுதியில் செல்ஃபி எடுக்க முற்பட்ட வெளிநாட்டு பெண் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்துள்ளார்.
ரஷ்ய பிரஜையான கிறிஸ்டினா அலக்வானா (வயது – 25) என்ற யுவதியே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண் ஒரு நாள் பயணமாக ஹிக்கடுவையில் இருந்து எல்ல நோக்கி சென்றிருந்த நிலையில் எல்ல கல்பிங்கயவுக்கு அருகில் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது செல்ஃபி எடுக்க முற்பட்ட வேளை ரயிலில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்து தெமோதர ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

