சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு: மேலதிக ரயில்கள் சேவையில்

எல்ல பிரதேசத்திற்கு நேற்று சனிக்கிழமை அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் புகையிரதத்தில் வந்ததாக எல்ல புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

தற்போதைய பாடசாலை விடுமுறை நாட்களில் எல்ல மற்றும் பண்டாரவளை ஹப்புத்தளை பதுளை பகுதிகளை பார்வையிடுவதற்காக அதிகளவான உள்நாட்டு சுற்றுலா பயணிகள் புகையிரதத்தில் வருவதாகவும், அதேபோன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிகளவிலாக வருகை தருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் காரணமாக நேற்று மலையக புகையிரதத்தில் பயணிக்கும் புகையிரதங்களுக்கு மேலதிகமாக மற்றுமொரு விசேட புகையிரதமும் போக்குவரத்திற்காக ஈடுபடுத்தப்பட்டதாக ரயில்வே திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.