சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க புதிய வேலைத்திட்டம்

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை இந்த வருடம் 3 மில்லியனாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் சமிந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவான மாதமாக அமைந்திருந்தது. அதன் படி 233,087 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஆண்டில் இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 3 மில்லியன் வரை அதிகரிக்க புதிய வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் சமிந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.