சீனா வழங்கிய அடுத்தகட்ட 1000 மெட்ரிக் தொன் அரிசி நாட்டை வந்தடைந்தது

மனிதாபிமான உதவியின் கீழ் சீனா வழங்கிய 5வது கட்ட அரிசி நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த அரிசி கையிருப்பு 1000 மெட்ரிக் தொன்கள் ஆகும்.

இவை பாடசாலை மாணவர்களின் மதிய உணவு தேவைக்காக பயன்படுத்தப்படவுள்ளன.

அதன்படி, இதுவரை சீனா வழங்கிய மொத்த அரிசியின் அளவு 4000 மெட்ரிக் டன் ஆகும்.

மேலும், 6000 மெற்றிக் தொன் அரிசி சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.

இலங்கையில் உள்ள 7900 பாடசாலைகளில் உள்ள 11 மில்லியன் மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு இந்த அரிசி போதுமானதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24