
‘கரையோர வேர்கள்’ நூல் வெளியீட்டு நிகழ்வு
-அம்பாறை நிருபர்-
ஸ்கை தமிழ் வலையமைப்பின் வெளியீட்டில் சில்மியாபுரா நலன்புரிச் சங்கம் அனுசரணையில் சில்மியூர் முனீரா வாஹித் எழுதிய ‘கரையோர வேர்கள்’ நூல் வெளியீட்டு நிகழ்வு பதுளை மாவட்ட சில்மியாபுர அல்- முர்ஷித் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் பாடசாலை அதிபர் எம். செய்யத் முஹம்மத் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வெலிமடை வலயக்கல்வி பணிமனையின் பிரதிக் கல்வி பணிப்பாளர்களான ஆர். எம் நவாஸ், ஜே. டி. எம் முர்ஷித் ஆகியோர் விசேட அதிதியாகவும் சிறப்பு அதிதிகளாக, அதிபர்களான ஏ.எஸ் ரஹ்மத்துல்லாஹ், எச்.எம் பதஹுல்லாஹ், கே.வேலாயுதம் மற்றும் அரசியல் பிரமுகரான ஏ.எம் இல்லியாஸ், உலமாக்கள், ஊர் பிரமுகர்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள் மற்றும் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.