
சிகரெட் விற்பனை செய்த சீன பெண் ஒருவர் உட்பட இருவர் கைது
வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை, நவீன கார் ஒன்றில் விற்பனை செய்த ஒரு ஆண் மற்றும் சீனப் பெண் ஒருவர் ஆகிய இருவரை கம்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து 780 சிகரெட் பக்கெட்டுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.