ஈரானின் தெற்குக் கடலோர கிராமமான ஹோர்முஸ்கத் மாகாணத்தின் குஹெஸ்தக் கிராமத்தில், செவ்வாய்க்கிழமை நடந்த திருமண விழாவின்போது ஏற்பட்ட வெடிப்பில் 5 பேர் உயிரிழந்து, சுமார் 70 பேர் காயமடைந்தனர்.
இறந்தோரில் 3 பெண்களும், 4 மற்றும் 16 வயதுடைய 2 குழந்தைகளும் அடங்குவர் என ஈரானிய அதிகாரிகள் தெரிவிப்பு.
Reuters சேகரித்து சரிபார்த்த புகைப்படங்கள், வீடியோக்களை ஆய்வு செய்த 4 ஆயுத நிபுணர்கள், சேதம் மற்றொரு இலக்கிலிருந்து தெறித்த ஆதாரம் (ricochet) அல்லது குப்பையின் விளைவு அல்ல என தீர்மானித்தனர்.
இதில் 3 நிபுணர்கள், இது தவறான ஈரானிய வான் தற்காப்பு ஏவுகணை அல்ல, மாறாக அமெரிக்க ஆயுதமே என முடிவு செய்தனர்; ஒரு நிபுணர் இது தனது இலக்கை தவறவிட்டிருக்கலாம் என கருத்து.
திருமண இடத்திலிருந்து 135 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு தொலைத்தொடர்பு கோபுரத்தையே அமெரிக்க படைகள் குறிவைத்ததாக 2 அமெரிக்க அதிகாரிகள் Reuters-இடம் உறுதிப்படுத்தினர்.
AP, New York Times ஆய்வுகளும், மீட்கப்பட்ட சிதைவுகள் அமெரிக்க வான்வழி வழிகாட்டப்பட்ட ஆயுதத்தைச் சேர்ந்தவை என அடையாளம் கண்டன.
துணை அதிபர் JD வான்ஸ், ஈரானின் இந்த குற்றச்சாட்டு குறித்து ஆரம்பத்தில் சந்தேகம் தெரிவித்தாலும், தற்போது அமெரிக்கா முழுமையாக விசாரித்து வருவதாக உறுதிப்படுத்தினார்.
இந்த சம்பவம், ஈரானுடனான 6 மாத மோதலை “சிறிய விடயம்” என அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்த சூழலிலேயே நடந்துள்ளது, இது சர்வதேச அளவில் கடும் கவனத்தை ஈர்த்துள்ளது.










