
சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுடன் தொழில்நுட்ப மட்ட கலந்துரையாடல் ஆரம்பம்
இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் தொழில்நுட்ப மட்டத்தில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று புதன்கிழமை காலை நிதியமைச்சில் இந்த கலந்துரையாடல் ஆரம்பமானதுடன், நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதியமைச்சின் பிரதிநிதிகள் குழு ஒன்று கூடியுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், எதிர்வரும் 31ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதரகத் தலைவர் பீட்டர் ப்ரூவர் மற்றும் இலங்கைக்கான செயற்பாட்டுத் தலைவர் மசிரோ நோசாகி ஆகியோர் இந்த குழுவிற்கு தலைமை தாங்குகின்றனர்.