
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணி பகிஸ்கரிப்பு
-சம்மாந்துறை நிருபர்-
அநுராதபுரம் மருத்துவமனையின் மருத்துவர்களுக்கான விடுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை 32 வயதான பெண் மருத்துவர் ஒருவர் கத்தி முனையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.
இதனைக் கண்டித்தும், குறித்த நபரை கைது செய்யுமாறும் கோரியும் இன்று புதன்கிழமை வைத்தியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இதற்கு அமைவாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற வைத்தியர்களும் இன்று புதன்கிழமை காலை முதல் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இதனால் வெளி நோயாளர்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டதுடன் அவசர சிகிச்சை பிரிவு இயங்கியமை குறிப்பிடதக்கது.