சம்மாந்துறையில் 19 ஆயிரத்து 500 மில்லி லீற்றர் கசிப்புடன் 2 பேர் கைது

-சம்மாந்துறை நிருபர்-

அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலவக்கரை வீதியில் அமைந்துள்ள வீட்டில் கசிப்புடன் இருவர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீரமுனை 04 பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும், வீரமுனை 01 பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் சந்தேக நபர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரிடமிருந்து 13 ஆயிரத்து 500 மில்லி லீற்றர் கசிப்பும், மற்றவரிடம் இருந்து 6 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பும் மீட்கப்பட்டிருந்ததுடன், சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்டநடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த கைது நடவடிக்கையானது, கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபரின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் தலைமையிலான குழுவினர் இக் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.