சட்டவிரோதமாக 436 அந்தூரியம் செடிகளை கொண்டு வந்த பெண்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள அந்தூரியம் செடிகளுடன் இரண்டு இலங்கை பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தின் பெங்கொக்கிலிருந்து வந்த அவர்கள், 436 அந்தூரியம் செடிகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விவசாயத் திணைக்களத்தின் இறக்குமதி அனுமதி இல்லாமல் அந்தூரியம் செடிகளை நாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.

இதனால், குறித்த பெண்கள் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு பெண்களும் முறையே 40 மற்றும் 45 வயதுடையவர்கள் எனவும் கொழும்பு மற்றும் அவிசாவளைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.