சட்டவிரோதமாக மாடுகளை கடத்தியவர்கள் கைது
-யாழ் நிருபர்-
யாழ்பாணத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை சட்ட விரோதமாக மாடுகளை கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மாடுகளும் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் இருந்து சட்டவிரோதமாக யாழ்பாணத்திற்கு லொறியில் கடத்தப்பட்ட 20 மாடுகளை மீசாலைப் பகுதியில் வைத்து சாவகச்சேரிப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதன்போது 19மாடுகள் உயிருடனும் ஒரு மாடு உயிரிழந்த நிலையிலும் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் வாகனச் சாரதி மற்றும் உதவியாளரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை சம்பவம் தொடர்பில் சாவக்கச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.