சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 1839 கிலோ இஞ்சி மீட்பு

கற்பிட்டியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இஞ்சியுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

கற்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவுக்கு நேற்று சனிக்கிழமை கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கற்பிட்டி, கண்ட குடாவ பகுதியில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1839 கிலோ கிராம் இஞ்சி கைப்பற்றப்பட்டுள்ளது.