
கோழி மற்றும் முட்டை உற்பத்தி முற்றாக வீழ்ச்சியடையும் என எச்சரிக்கை
அடுத்த வருடம் இலங்கை பாரிய போஷாக்கு பற்றாக்குறையை சந்திக்க நேரிடும், என உணவு பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி குழு அரசாங்கத்துக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
எனவே நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்படவேண்டும் அந்த குழு கோரியுள்ளது.
நாட்டில் தற்போது திரவ பால் உற்பத்தி 19.8 சதவீதமும், கோழி உற்பத்தி 12.1 சதவீதமும், கோழி முட்டை உற்பத்தி 34.9 சதவீதமும் குறைந்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலை நீடித்தால் அடுத்த ஆண்டு கோழி மற்றும் முட்டை உற்பத்தி துறைகள் முற்றாக வீழ்ச்சியடையும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.