கோட்டாபய ராஜபக்ஸவிற்கு சிங்கப்பூரில் வழங்கப்பட்ட குறுகிய கால பயண அனுமதிச் சீட்டு நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சிங்கப்பூருக்கு சென்ற போது வழங்கப்பட்ட குறுகிய கால பயண அனுமதிச் சீட்டு மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோட்டாபய ராஜபக்ஸவை பதவி விலக கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் வலுப்பெற்றதையடுத்து, கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளியை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.

இதனைத்தொடர்ந்து கோட்டாயப ராஜபக்ஸ நாட்டை விட்டு தப்பிச்சென்றார்.

எனினும், அவர் தப்பிசென்று தஞ்சமடையவில்லை என்றும் அவர் தனிப்பட்ட விஜயமொன்றை சிங்கப்பூரிற்கு மேற்கொண்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சிங்கப்பூரில் அவருக்கு வழங்கப்பட்ட குறுகிய கால பயண அனுமதிச் சீட்டு மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.