கோட்டாபய ராஜபக்ஷவை 15 நாட்களுக்குள் சிங்கப்பூரை விட்டு வெளியேறுமாறு அறிவித்தல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை 15 நாட்களுக்குள் சிங்கப்பூரை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் இருந்து தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்த முன்னாள் ஜனாதிபதி, சிங்கப்பூரில் இருந்து மத்திய கிழக்கு நாடொன்றிற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த 13ஆம் திகதி மாலைதீவில் இருந்து சவூதி ஏர் விமானத்தில் சிங்கப்பூர் சென்றார்.

ஜனாதிபதி சிங்கப்பூர் வந்திறங்கிய போது, ​​அவர் சாதாரண சுற்றுலாப் பயணியாகவே சிங்கப்பூருக்கு வந்ததாகவும், அவர் அரசியல் தஞ்சம் கோரவில்லை என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு பாதுகாப்பு வழங்குவதில் சிங்கப்பூர் தற்போது சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க