-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயிலடி பகுதியில் வைத்து ஐஸ் போதை பொருளுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று புதன்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 30 கிராமும் 700 மில்லி கிராமும் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு 12, குணசிங்க புரவை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிண்ணியா தம்பலகாமம் பிரதான பாதையில் பாதை தடை கடவை கடமையில் ஈடுபட்டிருந்த போதே குறித்த நபரை பரிசோதனை செய்ததன் பின் இவ்வாறு ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதுடன், கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.