கொழும்பு துறைமுகம் தரவரிசையில் மூன்றாம் இடத்தில்

உலகளாவிய கொள்கலன் துறைமுக செயல்திறன் குறியீட்டின் சமீபத்திய தரவரிசையின்படி, கொழும்பு துறைமுகம் தெற்காசியாவிலும் இந்திய துணைக்கண்டத்திலும் மிகவும் திறமையான செயற்பாடுகளுடைய துறைமுகமாக மாறியுள்ளது.

உலக வங்கி மற்றும் S&P குளோபல் சந்தை நுண்ணறிவு மற்றும் நிதி சேவைகள் நிறுவனம் இந்த தரவரிசையை வெளியிட்டுள்ளது

அதன்படி, கொழும்பு துறைமுகமானது இந்தியப் பெருங்கடலை ஒட்டிய 23 நாடுகளில் மூன்றாவது இடத்தையும், உலகில் உள்ள 370 துறைமுகங்களில் 22ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.